Tuesday, 16 August 2011

விவாதம்

என் சொந்த ஊரான நிலகோட்டையில் ரசித்த ஒரு விவாதம்..

1:
என்ன மாப்ள... ஆளையே காணோம் ரெண்டு நாளா.. ..ரொம்ப பிசியா??
2:
அதெல்லாம் ஒன்னும் இல்ல டா... திருப்பதிக்கு குடும்பத்தோட சாமி கும்பிட போயிருந்தோம் டா..
1:
எதுக்குடா அம்புட்டு தூரம் போன?
2:
சாமிய பார்க்கணும்ன சும்மாவா? குடுத்து வச்சிருக்கணும்டா...
1:
அட போடா சாமிய பார்க்கணும்னா இங்க இருக்குற பழனிக்கு போயிருக்கலாம்ல... இதுக்கு போய் எண்ணூறு கிலோ மீட்டரா போவாங்க?? (நிலகோட்டை - திண்டுக்கல் மாவட்டம் - பழனிக்கு சிறிது தொலைவில்)
2:
டேய்... இது முருகன் கோவில்டா... நான் போனது பெருமாள் கோவில்டா

(
இத்தருணத்தில், இந்த விவாதம் கடவுள் ஒன்னு தான் என்கிற ரீதியில் நாத்திகமாக செல்லும் என எதிர்பார்த்திருந்தேன்(!!

1:
பெருமாள் கோவிலா? டேய்... அவரு என்னைக்குடா மலை மேல இருந்திருக்காரு?
2:
என்னடா சொல்ற?
1:
முருகன் தான்டா எப்பவுமே மலைக்கு மேல இருப்பாரு... பழனி... திருத்தணி... விராலி மலை... பழமுதிர்சோலை...
2:
அதெல்லாம் சரி... இப்போ அதுக்கு என்ன?!
1:
திருப்பதி மலை மேல இருக்குறதும் முருகன் தான்!! நாமத்த போட்டு பெருமாள்னு சொன்னா கிறுக்குப்பய நம்புவான்.. நீயுமா??
2:
எனக்கு ஒண்ணுமே புரியலடா..!
1:
நான் பொறுமையா சொல்றேன்... கேளு... இந்த ஆந்திரா காரங்க இருக்காங்கள்ளஅவனுங்க தமிழ் கடவுளான முருகன ஏத்துக்க முடியாம நாமத்த போட்டு விட்டுட்டானுங்கடா! வேலையும் புடிங்கிட்டு... நாமத்தையும் போட்டுடாங்க பாத்தியா..??

அவர்களுக்கு பக்கத்தில் இருந்தவரு
, "தம்பி.. அதெலாம் இல்லபா... திருப்பதிக்கு ஸ்தல வரலாறு இருக்கு!!"
 
போயா யோவ்.. எங்களுக்கு தெரியாததா?? பஞ்சாமிர்தத்த கெட்டியா கிண்டி லட்டுன்னு குடுத்தா நம்பிடுவோமா?!

எனக்கு அதுக்கு மேல சிரிப்ப  அடக்க முடியல... அந்த இடத்த விட்டு நடந்துட்டேன்.. ஆனா கொஞ்ச நேரம் கழிச்சு ஒரு சந்தேகம் வந்த்ருச்சு.. "ஒரு வேல அவன் சொன்னது உண்மையா இருக்குமோன்னு!!"

கேட்டவை - ரசித்தவை

நான் இதுவரை கேட்ட - ரசித்த சில பல விஷயங்களில், பிடித்ததை மட்டும் இங்கு பதிவு செய்கிறேன்! 


தமிழில் எழுதும் முதல் உரைநடை தொகுப்பு இது.. தங்கள் கருத்துகளும் விமர்சனங்களும் என்றும் வரவேற்கப்படும்!!

Monday, 15 August 2011

வணக்கம்!

எனது வலைபதிவிடல் பற்றியதொரு தகவல் தெரிவிக்கும் பதிவு. இதுவரை இரு - ஆங்கிலம் மற்றும் தமிழ் - மொழி பதிவுகளையும் தனித்தனியே பிரித்து,

ஆங்கில வலைப்பதிவு - God's Own Diary
தமிழ் வலைப்பதிவு - கனவுகளும் கற்பனைகளும்

கருத்துகளும் விமர்சனங்களும் எப்பொழுதும் என்னை ஊக்கப்படுத்தும்!!
நீங்கள் இல்லையேல் நான் இல்லை - நன்றி :)

Sunday, 14 August 2011

என் உறவு - உன் நட்பு!


கவிதைகள் எழுத தலைப்புகள் குறையும் நேரம் இன்று..
வார்த்தைகள் இல்லா மௌனங்களை ரசிப்பதும் உண்டு..!
முன்னுரைகள் இல்லா முதற்காதலும் உண்டு..
முடிவுரைகள் இல்லா உறவுகளில் உன் உறவும் ஒன்று..!