Tuesday, 6 September 2011

தனுஷ்கோடி

இதுவரை தனுஷ்கோடிக்கு ஒரு ஐந்து முறை போயிருப்பேன். அனால் இந்த முறை ஒரு வித்தியாசம், கடைசியா நான் போன போது வயசு 13. சரியா சொன்ன இதுக்கு முன்னாடி வந்தது ஞாபகமே இல்ல. சரி இந்த முறை பயணம் கொஞ்சம் வித்தியாசமா இருந்துச்சு.. அத பதிவு செயலாம்னு ஒரு எண்ணம்.. அவளோ தான்..

தனுஷ்கோடி - மதுரைல இருந்து சரியா 201 கிலோமீட்டர். நால்வழிச்சலை இல்லாதது ஒரு சின்ன கடுப்பு, இருந்தாலும் என்னோட கல்லூரிய கடந்து போனதுல ஒரு சந்தோஷம். நம்ம எவளோ தான் காலேஜ் வச்சு கிண்டல் பண்ணிருந்தாலும், முடிச்சுட்டு வெளிய வந்ததுக்கு அப்புறம் எப்போ கல்லூரிய கடந்தாலும் கொஞ்சம் மனசு சஞ்சலப்பட்டது என்னமோ உண்மை தான்.. சரி மேட்டர்க்கு வருவோம்..

அதிகாலை 4 : 30 மணிக்கு பயணம் தொடங்கி 8 : 30 மணி வரைக்கும் இரண்டு தடவை காபி, 15 நிமிடம் பாம்பன் பாலம் போக தனுஷ்கோடி வந்து சேர்ந்தோம். ராமேஸ்வரத்தில் இருந்து 32 கிலோ மீட்டர் பயணம் ரொம்ப பிடிச்சது - கடல் காத்து, மொபைல்ல பாட்டு, மிதமான வெயில், மில்க் கிரீம் பிஸ்கட்! இரண்டு பக்கமும் கடல் - நடுவுல தார் ரோடு, ஜம்முன்னு கடைசி 5 கிலோ மீட்டர் பயணம் முடிஞ்சு தனுஷ்கோடி வந்து சேந்துட்டோம்ன்னு நெனச்சு இறங்கினோம். ஆனா அதான் இல்ல..



அந்த இடத்துல ஒரு பரோட்டா கடை, 10 வேன், ஒரு 4 டூரிஸ்ட் கார் கடற்கறை, ஒரு நினைவு தூண், நாலஞ்சு குடிசை. அப்பறம் ஒரு 30 பேரு அந்த ஊர்காரங்க! ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு ஊரே. அந்த ஊர்ல இருந்து இன்னும் 7 கிலோமீட்டர் போகணும் தனுஷ்கோடிக்கு. ஆனா நம்ம கார் போகாது. அங்க நின்னுட்டு இருந்த எதாவுது ஒரு வேன்ல தான் போகமுடியும்ன்னு சொல்லிட்டாங்க. ஒரு 30 நிமிஷம் விளையாடிட்டு, இயற்கைய ரசிச்சுட்டு, பசிக்கு சூடா பரோட்டா சாப்டுட்டு தனுஷ்கோடி போகலாம்ன்னு கிளம்பினோம். ஆளுக்கு 80 ருபாய் குடுத்து அந்த வண்டில ஏறியாச்சு.



ஒரு பக்கம் உள்வாங்கிய கடல், இன்னொரு பக்கம் அலை அதிகமா இருக்கிற கடல். பயணம் ரெண்டு கடலுக்கும் நடுவுல - இதுக்கு முன்னாடி போன வழித்தடுத்தலையே வண்டி போனா தான் போக முடியும். 30 நிமிஷம் பயணம் அது! அந்த வண்டி டிரைவர்க்கு ஒரு சபாஷ்! கொஞ்ச தூரம் போனதுமே ஒரு செதஞ்சு போன தேவாலயம், ரயில் தண்டவாளம்ன்னு 1964 புயல் விட்டுட்டு போன சின்னங்கள் நிறைய இன்னும் அப்டியே இருந்துச்சு. கடைசில எங்க வரணுமோ அங்க வந்து சேந்துட்டோம். இடத்துக்கு பேரு 'அரிச்சல் முனை'. ஒரு பக்கம் வங்ககடல் இன்னொரு பக்கம் இந்திய பெருங்கடல் - நடுவுல நின்னா சும்மா சூப்பரா காத்து அடிக்குது, குளிக்கணும்ன்னு தோணுது! அந்த இடத்துலயும் 'காரியம்' செய்வதுக்கு புனிதமான இடம்ன்னு கொஞ்சம் அசுத்தம் செஞ்சுட்டு இருந்தாங்க! அதெல்லாம் ஒதுக்கிட்டு பாத்தா இடம் ரம்மியமா இருக்கும்! அந்த இடத்துலயும் 10 கடை, 50 குடிசைன்னு ஒரு 300 பேரு இருக்காங்க! முக்கால் வாசி குடிசைகள்ல தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் கொடிகள் பறக்க விட்டிருந்தாங்க! குடிக்க தண்ணீர் எல்லாம் உப்பு தான், போக அங்க அங்க நல்ல தண்ணி ஊத்து இருக்கு!






 


அரிச்சல் முனைல இருந்து இலங்கை காடுகள் கடல் வழியே வெறும் 10 கிலோமீட்டர் தான்னு எல்லாரும் பேசிக்கிட்டு இருந்தாங்க. எனக்கு நம்பவே முடியல. ஏர்டெல்ல இருந்து ஒரு குறுந்தகவல் "Thankyou for Choosing Airtel. Welcome  to  Airtel  SRILANKA". அப்படியே இலங்கை போகணும்ன்னு ஆசை வந்திருச்சு (போனா கண்டிப்பா பதிவு எழுதுவேன்!)



இந்த பதிவின் நோக்கம் ரசிச்ச அழகை பதிவு செஞ்சதுல இல்ல.. ஒரு அழகான இடம் இந்தியால இருந்து ஒதுக்கி வச்சிருகாங்க. ரோடு இல்ல.. மின்சாரம் இல்ல.. சாயுங்காலம் 5 மணிக்கு எல்லாம் இருட்டிரும். அதுக்கு அடுத்து வெறும் விளக்கு தான். குடிக்க சுத்தமான தண்ணி இல்ல.. அங்க இருக்கிற மக்களுக்கு சரியான வசதிகள் இல்ல - பள்ளிக்கூடம், மருத்துவமனை, நூலகம் - இப்படி எதுவுமே இல்லாம ஒரு 300 பேரு இருக்காங்க.. இலங்கைல இருக்கிற தமிழர்கள காப்பத்தனும்ன்னு இங்க போர்க்கொடி தூக்குறீங்க, ஆனா இங்க இருக்கிற மக்களுக்கே ஒண்ணுமே செய்ய முடியலையே..!

Tuesday, 16 August 2011

விவாதம்

என் சொந்த ஊரான நிலகோட்டையில் ரசித்த ஒரு விவாதம்..

1:
என்ன மாப்ள... ஆளையே காணோம் ரெண்டு நாளா.. ..ரொம்ப பிசியா??
2:
அதெல்லாம் ஒன்னும் இல்ல டா... திருப்பதிக்கு குடும்பத்தோட சாமி கும்பிட போயிருந்தோம் டா..
1:
எதுக்குடா அம்புட்டு தூரம் போன?
2:
சாமிய பார்க்கணும்ன சும்மாவா? குடுத்து வச்சிருக்கணும்டா...
1:
அட போடா சாமிய பார்க்கணும்னா இங்க இருக்குற பழனிக்கு போயிருக்கலாம்ல... இதுக்கு போய் எண்ணூறு கிலோ மீட்டரா போவாங்க?? (நிலகோட்டை - திண்டுக்கல் மாவட்டம் - பழனிக்கு சிறிது தொலைவில்)
2:
டேய்... இது முருகன் கோவில்டா... நான் போனது பெருமாள் கோவில்டா

(
இத்தருணத்தில், இந்த விவாதம் கடவுள் ஒன்னு தான் என்கிற ரீதியில் நாத்திகமாக செல்லும் என எதிர்பார்த்திருந்தேன்(!!

1:
பெருமாள் கோவிலா? டேய்... அவரு என்னைக்குடா மலை மேல இருந்திருக்காரு?
2:
என்னடா சொல்ற?
1:
முருகன் தான்டா எப்பவுமே மலைக்கு மேல இருப்பாரு... பழனி... திருத்தணி... விராலி மலை... பழமுதிர்சோலை...
2:
அதெல்லாம் சரி... இப்போ அதுக்கு என்ன?!
1:
திருப்பதி மலை மேல இருக்குறதும் முருகன் தான்!! நாமத்த போட்டு பெருமாள்னு சொன்னா கிறுக்குப்பய நம்புவான்.. நீயுமா??
2:
எனக்கு ஒண்ணுமே புரியலடா..!
1:
நான் பொறுமையா சொல்றேன்... கேளு... இந்த ஆந்திரா காரங்க இருக்காங்கள்ளஅவனுங்க தமிழ் கடவுளான முருகன ஏத்துக்க முடியாம நாமத்த போட்டு விட்டுட்டானுங்கடா! வேலையும் புடிங்கிட்டு... நாமத்தையும் போட்டுடாங்க பாத்தியா..??

அவர்களுக்கு பக்கத்தில் இருந்தவரு
, "தம்பி.. அதெலாம் இல்லபா... திருப்பதிக்கு ஸ்தல வரலாறு இருக்கு!!"
 
போயா யோவ்.. எங்களுக்கு தெரியாததா?? பஞ்சாமிர்தத்த கெட்டியா கிண்டி லட்டுன்னு குடுத்தா நம்பிடுவோமா?!

எனக்கு அதுக்கு மேல சிரிப்ப  அடக்க முடியல... அந்த இடத்த விட்டு நடந்துட்டேன்.. ஆனா கொஞ்ச நேரம் கழிச்சு ஒரு சந்தேகம் வந்த்ருச்சு.. "ஒரு வேல அவன் சொன்னது உண்மையா இருக்குமோன்னு!!"

கேட்டவை - ரசித்தவை

நான் இதுவரை கேட்ட - ரசித்த சில பல விஷயங்களில், பிடித்ததை மட்டும் இங்கு பதிவு செய்கிறேன்! 


தமிழில் எழுதும் முதல் உரைநடை தொகுப்பு இது.. தங்கள் கருத்துகளும் விமர்சனங்களும் என்றும் வரவேற்கப்படும்!!

Monday, 15 August 2011

வணக்கம்!

எனது வலைபதிவிடல் பற்றியதொரு தகவல் தெரிவிக்கும் பதிவு. இதுவரை இரு - ஆங்கிலம் மற்றும் தமிழ் - மொழி பதிவுகளையும் தனித்தனியே பிரித்து,

ஆங்கில வலைப்பதிவு - God's Own Diary
தமிழ் வலைப்பதிவு - கனவுகளும் கற்பனைகளும்

கருத்துகளும் விமர்சனங்களும் எப்பொழுதும் என்னை ஊக்கப்படுத்தும்!!
நீங்கள் இல்லையேல் நான் இல்லை - நன்றி :)

Sunday, 14 August 2011

என் உறவு - உன் நட்பு!


கவிதைகள் எழுத தலைப்புகள் குறையும் நேரம் இன்று..
வார்த்தைகள் இல்லா மௌனங்களை ரசிப்பதும் உண்டு..!
முன்னுரைகள் இல்லா முதற்காதலும் உண்டு..
முடிவுரைகள் இல்லா உறவுகளில் உன் உறவும் ஒன்று..!

Sunday, 22 May 2011

நிலவோடு மழை வரும் நேரம்

உன் ஒரு நிமிட மௌனம்..

முதற்காதல் முற்றிலும் மறந்திடும் நேரம்..!



உன் ஒரு சொல் கேட்டு என் மௌனம்..

அலைகளை கரைகள் வென்றிடும் நேரம்..!



இசையை மறுக்கும் செவியின் சோகம்..

கனவோடு கண்கள் கலங்கிடும் நேரம்..!



நான் எனதில்லை என்ற எண்ணம் தோன்றும்..

உன் நினைவோடு நெஞ்சம் கனத்திடும் நேரம்..!



நீ என்னை கடந்திட நினைக்கும் தூரம்..

நிலவோடு மழை வரும் நேரம்..!

Sunday, 1 May 2011

யார் கடவுள்?

யார் கடவுள்?

கடவுளுக்கு உயிர் இல்லை...
உயிர்கள் இல்லாமல் கடவுளே இல்லை..!!


யார் கடவுள்?
கடவுளுக்கு தேவைகள் இல்லை..
தேவைகள் இல்லாமல் கடவுளே இல்லை...!


யார் கடவுள்?
கடவுளுக்கு உறவுகள் இல்லை..
உறவுகள் இல்லாமல் கடவுளே இல்லை...!


யார் கடவுள்?
கடவுளுக்கு எதிர்பார்ப்புகள் இல்லை..
எதிர்பார்ப்புகள் இல்லாமல் கடவுளே இல்லை...!!


யார் கடவுள்?
கடவுளுக்கு விதி இல்லை..
விதி இல்லாமல் கடவுளே இல்லை...!!


யார் கடவுள்?


கற்சிலையிலும் இல்லை.. 
தீப ஒளியிலும் இல்லை..
வெண்ணிற ஆடையிலும் இல்லை..
வெண்மேகத்திலும் இல்லை..
சிலுவையிலும் இல்லை..
சிவலோகதிலும் இல்லை..!!


யார் கடவுள்?


பண்பு கடவுள்..
பகுத்தறிவு கடவுள்..
நட்பு கடவுள்...
நகைச்சுவை கடவுள்..
நேசம் கடவுள்..
இறக்கம் கடவுள்..
காதல் கடவுள்..
மகிழ்ச்சி கடவுள்..
மனநிறைவு கடவுள்..
அமைதி கடவுள்..
அன்பு தான் கடவுள்...!


இவையாவும் கொண்டவனே கடவுள்!! 
இருக்கிறானா?

மனிதன் இருக்கிறான்..!!